[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அயோத்தி வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு

5-judge-supreme-court-bench-to-hear-ayodhya-case-on-january-10

அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு ஜனவரி 10 ஆம் தேதி விசாரிக்கிறது. 

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு விசாரித்த அலகா பாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்பும் சமமாக பகிர்ந்து கொள்ள தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு கடந்த 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது. அன்று புதிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் தகுதி வாய்ந்தவர்களை கொண்டு இந்த அமர்வு அமைக்கப்படும் எனவும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு ஜனவரி 10 ஆம் தேதி அயோத்தி வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதி எஸ்.ஏ. போபெட், நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்குவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close