[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

டெல்லியில் அபாய அளவை எட்டியது காற்றின் மாசு

air-pollution-reaches-danger-zone-in-delhi

காற்றை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், டெல்லி மக்களை அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.


காற்று மாசுபாடு என்பது மனிதர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்றை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று குறிப்பிட்ட 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியான கட்டுப்பாடுகளை பிறப்பித்திருந்தது. இருந்தும் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் சென்றது.  

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசின் சதவிகிதம் 570 புள்ளிகளை தாண்டியுள்ளது. இதனால் டெல்லி அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாசு அதிகமாக இருப்பதால் 5 நாட்களுக்கு டெல்லியில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் டெல்லியில் இந்த ஆண்டின் மிக அதிக மாசுள்ள தினமாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. 

Image result for மாசு

டெல்லியின் தற்போதைய மாசுப் பதிவு அபாய மாசு அளவான 571 புள்ளிகளை எட்டியுள்ளது. இதனால் இருதய நோய், முடக்குவாதம், நுரையீரல் புற்று ஆகியவை ஏற்படக்கூடும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மாசடைந்தக் காற்றை சுவாசிப்பதால் 10 இல் 9 பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close