[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்? காங்கிரஸ் இன்று முடிவு!

mp-done-rahul-gandhi-to-decide-rajasthan-chhattisgarh-cms-today

மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத்தை அறிவித்ததை அடுத்து, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வசம் இருந்த, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. யாரை முதல்வராக்குவது என்பதில் காங்கிரஸ் தலைமைக்கு சவாலாக இருக்கிறது. மத்தியப் பிரதேச  முதலமைச்ச ரைத் தேர்ந்தெடுக்க, போபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பின் மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் அறிவித்தது. அவர் இன்று பதவியேற்கிறார்.

(சச்சின் பைல்ட, அசோக் கெலாட்)

இதையடுத்து, ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட்டை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பதற்காக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வில்லை. அதனால் இன்றும் அந்தக் கூட்டம் நடக்கிறது. இதில் யார் முதலமைச்சர் என்பது முடிவு செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது.

(புபேஷ் பாஹெல்)

சத்தீஸ்கரில், மக்களவை எம்.பி., தம்ராத்வாஜ் சாஹூ, மாநிலத் தலைவர் புபேஷ் பாஹெல், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தியோ ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் புபேஷ் பெஹலுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close