[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

ம.பி.யில் ஆட்சியமைக்க உரிமை கோர மாட்டோம்”- சிவராஜ் சிங் சவுகான்

will-not-claim-the-right-to-form-government-shivraj-singh-chouhan

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமாக உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக 109 இடங்களில் வெற்றி கண்டுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ் வாதி 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து ம.பியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பலம் 117 ஆக அதிகரிக்கும். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

இதனிடையே பாஜகவும் ஆட்சியமைக்க முயற்சி செய்வதாக தகவல் பரவின. இதுகுறித்து பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது என தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close