[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

புது வாழ்வை நாளை தொடங்குகிறார் ’கேரள அரசின் மகள்’!

hanan-s-e-business-venture-to-be-unveiled-tomorrow

’கேரள அரசின் மகள்’ என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனால் அழைக்கப்பட்ட ஹனன் ஹமீது ஆன்லைனில் மீன் விற்கும் பிசினஸை நாளை தொடங்குகிறார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. 21 வயதான இவர், கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வருகி றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்பனை செய்து வந்தார். இவரை பற்றி மலையாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. பலர் உதவ முன் வந்தனர். இருந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் அவர் மீது எழுந்தது. இதையடுத்து,

அவரை அவதூறாக சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவரை அழைத்து, உதவி செய்தார். பின்னர் ஹனனை கேரள அரசின் மகள் என்றார். இதையடுத்து அவரை கடுமையாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு சினிமாவில் நடிக்க சில இயக்குனர்கள் வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினராகவும் அவர் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், செப்டம்பர் மாதம் பங்கேற்றார் ஹனன். நிகழ்ச்சி முடிந்து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கொடுங்கல்லுார் என்ற இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது. பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைப் பெற்று வந்த அவர், இப்போது நலமாகிவிட்டார். 

இந்நிலையில் தெருவில் வைத்து மீன் விற்ற இவர், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மீன் விற்க முடிவு செய்திருந்தார். இதற்காக எர்ணா குளம் அருகில் உள்ள தம்மனம் பகுதியில் ஒரு கடையை பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்தார். கடை உரிமையாளருக்கும் அவர் உறவினர்க ளுக்கு ஏதோ பிரச்னை. இதையடுத்து உரிமையாளரின் உறவினர்கள் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அத் திட்டத்தை கைவிட்டார் ஹனன்.

இதையடுத்து ஆன்லைனில் மீன் விற்க முடிவு செய்தார். இந்த விற்பனையை கொச்சி அருகிலுள்ள தம்மனம் பகுதியில் நாளை மாலை தொடங்குகிறார். இதை தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் திறந்து வைக்கிறார். மீன்களை வாங்கி சுத்தம் செய்து, மசாலா சேர்த்து, அப்படியே சமையல் செய்வதுபோல, பாக்கெட்டில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளார். வியாபார போக்குவரத்துக்காக, வாகனம் ஒன்றை யும் வாங்கியுள்ளார். 

இதுபற்றி ஹனன் ஹமீது கூறும்போது, ’எனக்கு பலர் உதவி செய்தார்கள். அதன் மூலம் கிடைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்தேன். கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக எனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு, இந்த தொழிலை தொடங்கியுள்ளேன். இரண் டு பேர் வேலைக்கு இருக்கிறார்கள். கொச்சியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று இதற்கு உதவுகிறது’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close