[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

சாக்கடையில் லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி ; 50 பேர் படுகாயம்

five-killed-50-injured-as-truck-falls-into-a-ditch-in-assam

அஸ்ஸாமில் லாரி ஒன்று சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அஸ்ஸாம் ஜிரிகிண்டேங் பகுதியில் உள்ள முக்கிம் சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 60க்கும் மேற்பட்டோர் கிருஸ்துமஸ் விழாவை சிறப்பிக்க வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். அப்போது திடீரென லாரி அருகில் இருந்த சாக்கடையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இதில் லாரியில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ”இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும்போது உயிரிழந்தனர். நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.” என தெரிவித்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close