[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

சத்தீஸ்கரில் 2-ம் கட்டத் தேர்தல்.. மக்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு

2nd-phase-election-in-chattisgarh

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 2-ஆவது மற்றும் இறுதிக்கட்ட ‌வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சபாநாயகர் மற்றும் 9 அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டி.எஸ்.சிங் தியோ ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் 15 ஆண்டுகளாக அரியணையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியும் அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் களம் காண்கின்றன. வாக்குப்பதிவு அமைதியாக நடப்பதற்காக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர், துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நக்சல் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் கடந்த 12-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் 78% வாக்குகள் பதிவாகியிருந்தன. டிசம்பர் 11-ம் தேதி ‌வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close