[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு

no-plan-to-ask-rbi-for-fund-transfer-finance-ministry-top-official

ரிசர்வ் வங்கியிடம் இருந்து 3.6 லட்சம் கோடி ரூபாய் கேட்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கேட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கமளித்துள்ளார். ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு ஒரு லட்சம் கோடி அல்லது 3.6 லட்சம் கோடி ரூபாய் கேட்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பொருளாதார கணிப்புகள் சரியான பாதையில் செல்வதாகவும், ஊடகங்கள் மூலம் சில தவறான கணிப்புகள் வெளியிடப்படுவதாகவும் கார்க் தெரிவித்துள்ளார். 2013 -14 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்த நிதிப்பற்றாக்குறை 2014-15 நிதியாண்டுக்குப் பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் கடன்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாக கார்க் தெரிவித்துள்ளார்.

2018 - 19 நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும் என்று அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு சரியான பொருளாதார மூலதனக் கொள்கையை வகுப்பது தொடர்பாகவே அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கார்க் ட்விட்டர் மூலம் விளக்கமளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக அதன் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா அண்மையில் புகார் கூறியிருந்தார். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதன்காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலகப்போவதாக தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close