[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

“நீதிமன்ற ஊழலை சினிமாவாக எடுக்க அனுமதி கொடுங்கள்” - நீதிபதிக்கு ஒரு விபரீத கடிதம்

court-staff-seeks-permission-from-p-h-hc-to-make-film-on-injustice-by-judges-gets-show-cause-notice-for-indiscipline

நீதிமன்றத்தில் நீதிபதிகள் செய்யும் அநீதிகள் குறித்து திரைப்படம் எடுக்க அனுமதி கோருவது ஒழுங்கீனமான செயல் என்று பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஹர்மீட் சிங் திங்கு என்பவர் பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் நீதிமன்றத்தில் நீதிபதிகள் செய்யும் அநீதிகள் குறித்து திரைப்படம் ஒன்றினை எடுப்பதற்கு தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி இமெயில் மூலமாக இந்தக் கடிதத்தை அவர் அனுப்பி இருந்தார். 

        

தனது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படத்தை எடுக்க விரும்புவதாகவும், அனைத்து அநீதிகளையும், வேலை நேரத்தில் நீதிபதிகளால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றியும் எடுத்துச் சொல்ல விரும்புவதாகவும் ஹர்மீட் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். நீதிபதிகள் சட்டத்தை எப்படி மீறுகிறார்கள் என்பது பற்றியும், தனக்கு எதிராக சட்டத்தை எப்படி ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது பற்றியும் அதில் கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.  

பஞ்சப் மற்றும் ஹரியானா மாநில நீதிமன்றங்களில் உள்ள பணியாளர்கள் எப்படி அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்து யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ச்சியாக தன்னுடைய கருத்துக்களை ஹர்மீட் வெளிப்படுத்தி வருகின்றார். ‘இந்திய நீதித்துறையின் கறுப்பு பக்கம்’ என்ற பெயரில் அவர் பல்வேறு வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இந்த வீடியோக்கள் யுடியூபில் பல்வேறு பாகங்களாக காணக்கிடைக்கின்றன. 

             

2009 ஆம் ஆண்டு நீதிமன்ற அலுவலக பணியில் சேர்ந்த ஹர்மீட் தன்னுடைய கடிதம் குறித்து கூறுகையில், “நீதிமன்றத்தின் எல்லா மட்டங்களிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற பணியாளர்கள் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்குவதற்கு கூட லஞ்சம் வாங்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் கூட வழங்கப்படுவதில்லை. போதிய அனுபவம் இல்லாமல் உறவினர், தெரிந்தவர் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இதுபோன்ற நடைமுறைக்காக வாங்கப்படும் லஞ்சம் குறித்து பலமுறை நான் புகார் அளித்துள்ளேன். அனுமதியில்லாமல் யுடியூப்பில் வீடியோ பதிவுகள் வெளியிட்டதற்காக என்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால் தான், மொத்தமாக நீதிமன்றத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து திரைப்படமாக எடுக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்க முடிவு செய்தேன்” என்றார்.  

       

இந்தக் கடிதத்திற்கு தற்போது பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. மாவட்ட நீதிமன்றத்திற்கு எழுதப்பட்ட அக்கடிதத்தில், நீதிபதிகள் குறித்து திரைப்படம் எடுக்க அனுமதி கோரி ஹர்மீட் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கடிதம் எழுதியது மிகவும் ஒழுங்கீனமான செயல் என்று கூறியதோடு, ஹர்மீட் சிங் திங்கின் கோரிக்கைய உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

          

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close