[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

உ.பி.யில் தமிழக அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!

tn-officers-took-actions-in-uttar-pradesh

உத்தரப்பிரதேசத்தில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்ற அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் இணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். துடிப்பும், வேகமும் கொண்ட இவர் தவறு செய்பவர்கள் அரசியல் பின்புலம் கொண்டராக இருந்தாலும் தைரியமாக அதனை தட்டிக் கேட்பதுடன் கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்.

சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் பகுதி ஒன்றில் அரசாங்க அனுமதி இல்லாமல் மணல் திருடும் பணிகளில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர். தங்களுக்கு இருந்த அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி அவர்கள் இந்த சட்டவிரோத பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களில் சிலர் சட்டவிரோத புகார் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்றனர். புகாரினை பெற்றுக்கொண்ட மணிகண்டன் துணிச்சலாக அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் மணல் திருடியதாக 4 பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளார். அவர்களில் மூன்று பேர் பாரதிய ஜனதா கட்சியையும், ஒருவர் சமாஜ்வாதி கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பேரையும் குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என அரசியல் பின்புலத்திலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் தைரியமாக அந்த நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த மொகரம் பண்டிகையின் போதும் அங்குள்ள இந்துகள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதல் உருவாகும் சூழல் உண்டாகியுள்ளது. ஆனால் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்ட மணிகண்டன் உடனடியாக அதனை தீர்த்து வைத்துள்ளார். மணிகண்டனின் துணிச்சலான நடவடிகைக்கு பொதுமக்களில் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close