[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

ஒடிசாவை உலுக்கிய யானைகள் மரணம்.. ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழப்பு..!

7-elephants-electrocuted-in-odisha-while-passing-through-a-village

ஒடிசாவில் ஒரே நேரத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் உள்ள வயல் ஒன்றில் 13 யானைகள் கூட்டமாக மேய்ந்துள்ளன. பின்னர் அவைகள் அங்கிருந்த கால்வாய் நோக்கி வரிசையாக சென்றுள்ளன. அந்த இடத்தில் உயர்அழுத்த மின்கம்பி ஒன்ற தாழ்வான உயரத்தில் சென்றதாக தெரிகிறது. இந்த கம்பி யானைகள் மீதும் பட்டுள்ளது. இதில் 7 யானைகள் ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. மற்ற யானைகள் எப்படியோ தப்பித்துவிட்டன. உயிரிழந்ததில் 5 பெண் யானைகள் மற்றும் இரண்டு யானைகள்.

ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் உயிரிழப்பு தொடர்பாக வன மற்றும் சுற்றுச்சூழல் துறையானது ஒரு அதிகாரியை பணிநீக்கம் செய்ததோடு 6 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு மதல் 2017 வரை இந்தியாவில் மட்டும் 655 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மின்சாரம் தாக்குதல், ரயிலில் அடிபடுதல், யானைகளை தந்தத்திற்காக வேட்டையாடுதல் மற்றும் விஷம் வைத்து கொல்லுதல் ஆகியவவையே ஆகும். 1987 முதல் 2010 வரை 150 யானைகள் ரயில்வே தண்டவளாங்களை கடக்கும்போது அடிபட்டு உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகத்திலேயே ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பு இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இதனிடையே யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க இந்திய ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. யானைகளின் வழித்தடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் இச்சூழலில் தொடர்ச்சியாக யானைகள் வாழ முடியாத சூழ்நிலையே உள்ளது. எனவே யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை காக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close