[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

“காந்தியின் கனவை இந்தியா பூர்த்தி செய்கிறது” - பிரதமர் மோடி

pm-modi-said-india-fulfill-gandhi-s-dream

மகாத்மா காந்தியின் கனவை இந்தியா பூர்த்தி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் உள்ள பள்ளி ஒன்றில் காந்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் காந்தியின் திருவுருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு வந்த மோடி, காந்தியின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்தார். அத்துடன் காந்தியின் 150வது பிறந்த தினம் குறித்து கூறியுள்ள பிரதமர், காந்தியின் கனவை இந்தியா பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி இந்தியாவை கடிதங்கள் மற்றும் ஆன்மாவின் மூலமாகவும் எண்ணங்கள் மற்றும் செயல்களால் இணைத்தவர் என்று கூறியுள்ளார்.

அத்துடன் சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியதாக குறிப்பிட்டுள்ள மோடி, “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஆனால் இந்த இடத்திலும் நம்முள் பன்முகத்தன்மை ஏற்பட்டதில்லை. மக்களிடையே ஒற்றுமை, காலணி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுடன் உலக அளவில் இந்தியா ஒற்றுமையால் உயர்ந்து நிற்கின்றது என்றால், அது காந்தியால்தான். அவர் இதை இந்தியாவில் மட்டும் செய்யவில்லை. தென்னாப்பிரிக்காவிலும் நிகழ்த்தியுள்ளார். காந்தியின் தலைமையை உணர்ந்தால், அவர் ஒரு மகத்துவமானவர் என்பது புரியும். அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை ஒழுக்கத்தை கடைபிடித்தவர். 21ஆம் நூற்றாண்டில் உலகில் உள்ள பல பிரச்னைகளுக்கு காந்தி தீர்வளித்துவிட்டுச் சென்றுள்ளார். உலகில் உள்ள பயங்கரவாதம், தீவிரமயமாதல், தேசத்திற்கு எதிராக செயல்படுதல் என அனைத்துக்கும் ஒரே தீர்வாக, அகிம்சையின் வழி மக்களை இணைக்க காந்தி கற்றுக்கொடுத்துள்ளார்” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close