[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

“எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோற்றுவிட்டது” - பிரதமர் மோடி

congress-lost-his-opposition-party-position-also-pm-modi

எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் கட்சித் தோல்வி அடைந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி, நமோ செயலி மூலம் பாரதிய ஜனதா கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது, பாஜகவினர் வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். சாதி மத பாகுபாடின்றி அனைவரும் முன்னேற வேண்டும் என்பதற்காகவே தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். 

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொண்டர்களிடமும் பேசிய மோடி, சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்படி அழைப்பு விடுத்தார். வரும் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த‌ 4 ஆண்டுகளில் காங்கிரஸின் உண்மை முகம் மக்களுக்கு வெளிப்பட்டிருப்பதாக கூறிய மோடி, எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close