[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

கிருஷ்ண ஜெயந்தி அன்று அசைவ பீட்ஸா: மனைவியுடன் சண்டை போட்ட ஐபிஎஸ் சீரியஸ்!

kanpur-ips-officer-still-critical

கிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்ஸா ஆர்டர் செய்ததால் வந்த பிரச்னையை அடுத்து ஐபிஎஸ் அதிகாரி விஷம் குடித்தார். அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிழக்கு கான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் தாஸ். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை, அதிகாலை 4 மணிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். ஐபிஎஸ் அதிகாரிக்கும் அவர் மனைவி ரவீனா சிங்குக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரிந்தது. கடந்த 2ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அன்று ரவீனா, அசைவ பீட்ஸா ஆர்டர் செய்துள்ளார். ’கிருஷண ஜெயந்தியும் அதுவுமா ஏன் அசைவம்?’ என்று கேட்டுள்ளார் ஐபிஎஸ் அதிகாரியான சுரேந்தர் குமார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது முற்றியதால் உறவினர்கள் வந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இருந்தும் இரண்டு பேருக்கும் பிரச்னை தீரவில்லை. தொடர்ந்துள்ளது. மனம் வெறுத்துப் போன சுரேந்தர் குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதுதொடர்பாக யு-டியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். பின்னர் பூச்சிக்கொள்ளி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அவர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் விஷம் கிட்னியை அதிகமாக பாதித்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close