[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

நம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா..? இவர்கள் உண்மையான ஹீரோக்கள்..!

we-keep-our-home-clean-right-kerala-flood-victims-leave-temporary-shelter-spotless

இடைவிடாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. இதுவரை 300-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 3 லட்சம் மக்கள் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். எனவே கடும் சேகத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இளைஞர்கள், பொதுமக்கள், இராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள்.

வீடுகளை இழந்தவர்களில் பலர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூனமாவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட 1200-க்கும் அதிகமான மக்கள் கடந்த 4 நாட்களாக அந்த பள்ளியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மழை ஓரளவு ஓய்ந்துள்ளதால் தங்களது வீடுகளை தேடி அவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்று வருகின்றனர். தற்போது அவர்கள் தங்கியிருந்த பள்ளியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் தங்கிவிட்டு சென்ற இடம் அவ்வளவு சுத்தமாக உள்ளது. எந்தவித அழுக்கும், தேவையற்ற பொருட்களும் அதில் இல்லை. கிளம்பி செல்வதற்கு முன் தங்கியிருந்த இடத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்னர்தான் அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேறியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அதில் தங்கியிருந்த ஒருவர் கூறும்போது, “ கடந்த நான்கு நாட்களாக இந்த இடம்தான் எங்களுக்கு வீடாக இருந்து அடைக்கலம் தந்தது. நம் வீட்டை நாம் அழுக்காக வைத்திருப்போமா..? நாம் வீடு போன்று தங்கியிருந்த இந்த இடத்தை எப்படி அழுக்குடன் விட்டுச் செல்ல முடியும்..? அதனால்தான் சுத்தப்படுத்திவிட்டு செல்கிறோம்” என கூறியுள்ளார்.

கேரளா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக பல வீரர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. இருக்க இடம் இல்லை. ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் நிஜ ஹீரோக்களாக தங்களது வேலையை செய்து வருகின்றனர். அந்த வகையில் தாங்கள் 4 நாட்கள் வசித்த இடம் அசுத்தத்துடன் இருக்கக்கூடாது என நினைத்து சுத்தப்படுத்தி சென்ற மக்களும் உண்மையில்  ஹீரோக்கள் தான்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close