[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி

flood-in-kerala-22-dead

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்திலுள்ள பெருங்காவு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதேபோல் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, பத்தனம்திட்டா பகுதிகளில்14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close