[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

ed-seeks-red-corner-notice-against-vijay-mallya

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படுவதன் மூலம் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வழி ஏற்படும். முன்னதாக வங்கிக் கடன் ஏய்ப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக மல்லையாவை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று அமலாக்கத் துறை இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இது நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று வழிகளில் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் அல்லது தேடப்படும் நபர் வெளிநாட்டில் பதுங்கியிருந்தால் அவரை உரிய நாட்டிடம் ஒப்படைக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் நடைமுறையை இன்டர்போல் பின்பற்றுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close