[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

மீன் விற்று படிக்கும் மாணவியை மோசமாக விமர்சித்த இளைஞர் கைது!

cyberattack-on-hanan-vayanadu-youth-in-custody

கேரளாவில் பகுதி நேரமாக மீன் விற்று, படித்து வரும் மாணவியை மோசமாக விமர்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் ஹமீது. (21) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படிக்கிறார். மாலை நேரத்தில் மீன்விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். அவரது வாழ்க்கை குறித்து கேரளாவின் ’மாத்ருபூமி’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே யாரிடமும் உதவி கேட்காமல், உழைத்து முன்னேறும் ஹனனின் கதையை படித்த பலருக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். 

இந்தக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் ஹனனின் தன்னம்பிக்கை குறித்து பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது பொய் என்றும், பணம் பறிப்பதற்காக இவர் இப்படி செய்வதாகவும் சிலர் கிண்டலடித்து கருத்து பதிவிட்டிருந்தனர். அவர் தொடர்பாக மோசமான வதந்திகளையும் பரப்பினர். இந்நிலையில் அவர் படிக்கும் கல்லூரி முதல்வரும், அவரது நண்பர்களும் ஹனன் கதை உண்மையானதுதான் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், தனது முகநூல் பக்கத்தில், இச்சம்பவம் குறித்து உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். கிண்டல் செய்வதை அவர் வன்மையாகக் கண்டித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய ஹனன், ‘எனக்கு உங்களின் எந்த உதவியும் வேண்டாம். என்னால் இயன்ற வேலையை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறினார். இந்நிலையில் இந்தச் செய்தி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரியவந்தது. அவர், ஹனனை கிண்டல் செய்தவர்களுக்கு கடும் கண்டனத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார்.

 ‘ஹனனின் செயலை கண்டு பெருமை பட வேண்டும். அவர் தன்னை மட்டுமல்ல, பல்வேறு வேலைகள் செய்து படித்துக்கொண்டே குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை கதையை கேட்டு பெருமையாக உணர்ந்தேன். அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவருக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்க உத்தரவிட்டுள்ளேன். அவரை கிண்டல் செய்வது கண்டனதுக்கு உரியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஹனன் பற்றி சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்த வயநாடு பகுதியைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close