[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆபாச படம் பார்த்து பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் கைது, பெற்றோர் அதிர்ச்சி!

five-boys-aged-9-to-14-rape-minor-after-watching-porn

மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சஹஸ்புர். இந்தப் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது அண்ணனின் மொபைல் போனில் கேம்ஸ் விளையாட முயன்றுள்ளான். அப்போது அதில் அபாச படம் இருந்ததைப் பார்த்தான். இதை தனது நண்பர்களிடமும் காட்டியுள்ளான். அவர்களை அனைவரும் 9-ல் இருந்து 14 வயதுள்ள சிறுவர்கள். அதை பார்த்தபின் அவர்களுக்கும் பாலியல் ஆசை ஏற்பட்டது. இவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தில் எட்டு வயது சிறுமி இருந்தாள்.

அவளை சாக்லேட் கொடுத்து அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை வன்கொடுமை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாதபோது சென்ற அவர்கள், அந்தக் கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். அப்போது வீட்டின் வெளியே காவலுக்கு இருந்த சிறுவன், அவனது அண்ணன் தங்களை நோக்கி வருவதை கண்டு அந்தச் சிறுமியை விரட்டியுள்ளான்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அந்த சிறுமி யாரிடமும் பேசவில்லை. சாப்பிடவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவளின் பெற்றோர், ஏன் என்று விசாரித்தனர். பின்னர்  கண்ணீருடன் நடந்ததைக் கூறியுள்ளார் சிறுமி. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்து வீட்டினரிடம் தெரிவித்தனர். அவர்களிடன் ஆலோசனைப் படி போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஐந்து சிறுவர்க ளையும் கைது செய்த போலீசார், சிறார்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தால் சிறுவர்களின் பெற்றோர்களும் ஷாக் ஆகியுள்ளனர்.

இதே போல, கடந்த மாதம் போனில் ஆபாசபடம் பார்த்து, 6-ல் இருந்து 10 வயது கொண்ட நான்கு சிறுவர்கள் கான்பூரில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . அதற்குள் நடந்துள்ள இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close