[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

8 வயது சிறுமிக்கு இப்படி ஒரு கொடுமையா..? பெற்றோர் கண்ணீருடன் கதறல்..!

police-fear-minor-victim-in-mandsaur-rape-is-infected-with-hiv

எங்களுக்கு எந்த இழப்பீடும் வேண்டாம். குற்றவாளியை தூக்கில் போட்டால் போதும் என பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 8. இவரை கடந்த ஜூன் 26-ம் தேதி வழக்கம்போல பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள், நம் குழந்தை வீட்டிற்கு வருவாள் என காத்திருந்தனர். ஆனால் பெற்றோர் நினைத்தபடி குழந்தை வீடு திரும்பவில்லை. குழந்தை பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு வெளியே காத்திருந்துள்ளார். அப்போது அங்கே வந்த இர்ஃபான் என்ற 20 வயது இளைஞர், குழந்தையை கடத்தி அங்கிருந்த முட்புதர் அருகே கொண்டுச் சென்றுள்ளார். பின்னர் மறைவான இடத்தில் வைத்து 8 வயது சிறுமி என்றும் பாராமல் குழந்தையை அந்த இளைஞர் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் குழந்தை இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லி விடக் கூடாது என்பதற்காக குழந்தையின் தொண்டையை கத்தியால் அறுத்த அந்த இளைஞர், அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதனிடையே குழந்தையை காணாமல் பரிதவித்த பெற்றோர்கள், பல இடங்களில் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசாரும் குழந்தையை தேடிவந்த நிலையில், குழந்தை முட்புதர் ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் குழந்தை விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தைக்கு மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக இர்ஃபான், ஆஃசிப் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதி கேட்டு பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கூறும்போது, “ எங்களுக்கு எந்த இழப்பீடும் வேண்டாம். எங்களுக்கு குற்றவாளியை தூக்கில் போட வேண்டும். அது மட்டுமே எங்களின் எதிர்பார்ப்பு. எங்கள் குழந்தைக்கு நேர்ந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் இந்த கதி ஏற்பட்டு விடக்கூடாது” என தெரிவித்தார்.

குற்றம்சாட்ட இர்ஃபானின் தந்தை இதுகுறித்து கூறும்போது, “ எனது மகனுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அவன் தவறு செய்து உறுதிப்படுத்தப்பட்டால் அவனை தூக்கிலிடுங்கள். இர்ஃபானும், ஆசிஃப்பும் ஏற்கனவே நல்ல நண்பர்கள். அவனின் சேர்க்கை சரியில்லை. என் மகனை மிகப்பெரிய அப்பாவி என்றெல்லாம் என்னால் கூற முடியாது. எனக்கும் 5 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாலியல் வன்கொடுமையால் சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்குமோ என போலீசார் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஹெச்ஐவி சோதனையை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close