[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

’காரை லேட்டாவா கொண்டு வருவே?’: போலீஸ் டிரைவரை தாக்கிய ஐபிஎஸ் மகள்!

driver-files-complaint-against-ips-officer-s-daughter

காரை லேட்டாக கொண்டு வந்ததாகக் கூறி, போலீஸ் டிரைவரை தாக்கிய ஐபிஎஸ் அதிகாரி மகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநில கூடுதல் டிஜிபியாக இருப்பவர் சுதேஷ்குமார், ஐபிஎஸ். இவரது கார் ஓட்டுநனர் கவாஸ்கர். இவர் சிறப்பு ஆயுதப்படை பிரிவில் பயிற்சி பெற்ற போலீஸ்காரர். சுதேஷ் குமாரின் மனைவி மற்றும் மகள் வியாழக்கிழமை காலை வாக்கிங் சென்றபோது, கார் வருவதற்கு தாமத மானது. இதனால் கோபமான சுதேஷ் குமாரின் மகள், டிரைவரை தன் செல்போனால் கழுத்து மற்றும் முதுகில் அடித்துத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கவாஸ்கர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

பின்னர், இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சுதேஷ் குமார் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல கவாஸ்கர் மீதும் அவர் மகள் புகார் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, துணை போலீஸ் சூப்பிரெண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது.  இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பானது.

இந்நிலையில் கவாஸ்கரின் மனைவி ரேஸ்மா, முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து புகார் கொடுத்தார். அதில் தனது கணவரை மேலதிகாரி கொத்தடிமை போல நடத்துவதாகக் கூறியிருந்தார். இதுபற்றி விசாரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close