[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா! - பெண் குழந்தைக்கு பாவம் செய்த பெற்றோர்

parents-leave-alone-baby-girl-in-church-on-kerala

கொச்சியில் பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை தேவாலயத்தில் பெற்றோர் விட்டுச்செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள எடப்பள்ளி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை பெற்றோர்கள் துணியில் சுற்றி வைத்துவிட்டு சென்றனர். இது அந்த தேவலாயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காட்சியில், ஒரு பெண் கையில் துணியில் சுற்றப்பட்ட பெண் குழந்தையை கொண்டு வருகிறார். உடன் அந்தப் பெண்ணின் கணவரும் வருகிறார்.

ஆலயத்திற்குள் வந்த பின்னர் குழந்தையை பெற்றுக்கொண்ட கணவர், யாரும் இல்லாத இடத்திற்கு குழந்தையை தூக்கிச்செல்கிறார். நடந்து செல்லும்போது யாரேனும் பார்க்கின்றனரா? என்று நோட்டமிட்டபடியே செல்கிறார். அதன்பிறகு அங்கிருக்கும் தூண் ஒன்றின் பின்னால் செல்லும் அவர், தனது குழந்தையின் நெற்றியில் ஏக்கத்துடன் முத்தமிடுகிறார்.பின்னர் தன் மனதை கல் ஆக்கிக்கொண்டு, பிறந்து 2 நாட்களே ஆன அந்தப் பிஞ்சுப் பெண் குழந்தையை தனியாக, தரையில் வைத்துவிட்டுச் செல்கிறார். 

இந்தக் காட்சிகள் காண்போரை உருக வைக்கும் வகையில் உள்ளது. முன்னதாக, குழந்தையை தேடி யாரும் வராததாலும் குழந்தையை விட்டுச்சென்றது யார் என தெரியாததாலும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தான், தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த காட்சிகளைக் கண்டுள்ளனர். மேலும், பெண் குழந்தை என்பதால் பெற்றோர் விட்டுச்சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close