[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

ஏழை உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்த காங்கிரஸ் எம்எல்ஏ

assam-mla-carries-cremates-body-of-poor-man

அஸ்ஸாம் மாநில எம்எல்ஏ ஒருவர், ஏழை உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்காட்டை சேர்ந்தவர் திலீப் தே. இவருக்கு உறவு என சொல்வதற்கு ஒரே ஒரு நபர் மட்டுமே உண்டு. அதுவும் அவர் மாற்றத்திறனாளி. இந்நிலையில் திலீப் தே சமீபத்தில் உயிரிழந்தார். எனவே திலீப் தே-வை தூக்கிச் சென்று அடக்கம் செய்ய யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தீலிப்பின் உடலை தானும் ஒருவராக சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறார் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி.

திலீப் தே இறந்தது அண்டை வீட்டாரர் மூலம் எம்எல்ஏ ரூப்ஜோதிக்கு தெரியவந்திருக்கிறது. திலீப்பை தூக்கி சென்று அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதை அறிந்த ரூப்ஜோதி, உடனே சம்பவ இடத்திற்கு சென்றிருக்கிறார். பின்னர் திலீப் தே-வின் உடலை பாடையில் கட்டி சுடுகாட்டுக்கு நான்கு பேர் தூக்கி சென்று அடக்கம் செய்தனர். அதில் ஒருவர் காங்கிரஸ் எம்எல்ஏ ரூப்ஜோதி.  இதுகுறித்து அவர் கூறும்போது, “ திலீப் மிக ஏழ்மையான மனிதர். ஒரு சகமனிதராக, மக்கள் பிரதிநிதி என்ற முறையில் திலீப்பின் இறுதிச் சடங்கை முறைப்படி செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனது கடமையை தான் செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். ரூப்ஜோதி மூன்று முறை இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வாகியிருக்கிறார். மேலும் ரூப்ஜோதி மிகுந்த மனிதாபிமானம் கொண்டவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close