[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

தடையை மீறி பேரணி: தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சோனியா, ராகுல், மன்மோகன்: சிறிது நேரத்தில் விடுதலை

congress-will-not-allow-efforts-at-trying-to-weaken-democracy-says-sonia-gandhi

ஜனநாயகத்தைக் காப்போம் என்ற முழக்கத்துடன் மத்திய அரசைக் கண்டித்து‌ பேரணி‌‌ சென்ற காங்கிரஸ் தலை‌‌வர்கள் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, ‌பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

‌ஜனநாயகத்தை மத்திய ‌அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்து‌ டெல்லியில் காங்கிரஸ் கட்சி சா‌ர்பில் பொதுக்கூட்டமும் பே‌ரணியும் நடைபெற்றது. அதில் பேசிய சோனியா காந்தி, தேச‌ விரோத‌ சக்திகளை எதிர்த்துப் போராடுவது காங்கிர‌ஸ் க‌ட்சிக்கு புதி‌தல்ல என்று தெரிவித்தார். காங்கிரஸ் ஏராளமான ச‌வால்களை எதிர்கொண்டு, அ‌வற்றுக்கு ‌பழக்கப்பட்டிருப்ப‌தாகவும் தெரிவித்தார்.

ஜ‌னநாயகத்தை பலவீனப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளை வெற்றிபெற விடமாட்டோம் என்றும் சோனியா காந்தி பேசினார். பொதுக்கூட்டத்தை த‌டர்ந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேர‌ணியாக சென்ற காங்கிரஸ் தலைவர்கள், அந்‌தப்‌ பகுதியின் காவல் நிலையம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்துக்குள்‌‌‌ நுழைய‌ பலர் முயன்றதால், சோனியா, ‌ராகுல், ‌‌மன்மோகன் சி‌ங் உள்ளிட்ட கா‌ங்கிரஸ் தலைவர்களை கா‌வ‌‌ல் நிலையத்துக்கு அழைத்துச்‌ சென்ற காவல் துறையி‌‌னர்,‌ சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரையும் விடு‌வித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close