[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மல்லையாவை பதவி நீக்கப் ‌பரிந்துரை

rajya-sabha-ethics-committee-recommends-expulsion-of-vijay-mallya-with-immediate-effect

தொழிலதிபர் விஜய் மல்லையாவை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு மாநிலங்களவை நன்னெறிக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு, நன்னெறிக்குழுவின் தலைவர் கரண் சிங் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்த நடவடிக்கை மூலம் குற்றமிழைக்கும் உறுப்பினர்கள் மீது நாடாளுமன்றம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்கிற தகவல் பொதுமக்களைச் சென்றடை‌யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி மல்லையா அனுப்பியிருந்த கடிதத்தை ஹமீது அன்சாரி நிராகரித்துவிட்டார். ‌அந்தக் கடிதம் முறைப்படி அனுப்பப்படவில்லை என்பதால் ஏற்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close