[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞரை சரமாரியாக தாக்கிய எம்எல்ஏ

aimim-lawmaker-party-workers-attack-child-rape-attempt-accused-in-hyderabad

 

ஹைதராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட நபரை, ஒரு எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து காவல்நிலையத்திற்குள் புகுந்து அடித்து உதைத்துள்ளார்.

இஸ்மாயில் என்பவர், அவர் வசித்த பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலி‌யல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அச்சிறுமியை மீட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இஸ்மாயிலை கைது செய்து சதேர்காட் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த மலாக்பேட் தொகுதி எம்.எல்.ஏ அகமது பிலால் தனது ஆதரவாளர்களுடன் காவல்நிலையத்திற்குள் புகுந்து இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவில் பதிவாகின. இக்குற்ற செயலில் ஈடுபட்ட இஸ்மாயிலுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close