[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

இறந்துப்போனதா இந்தியாவின் மிகப்பெரிய புலி ?

has-india-lost-its-biggest-tiger-forever-experts-believe-jai-is-dead

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நாக்பூரில் இருக்கிறது உம்ரெட் கர்ஹன்ட்லா வனவிலங்கு சரணாலயம். இங்கு, ‘ஜெய்’ என்ற புலி வளர்ந்து வந்தது. இந்தியாவிலேயே மிகப் பெரிய புலியான ஜெய் 250 கிலோ எடைக் கொண்டதாகும், அதேபோல நீளத்திலும் அகலத்திலும் உயரத்திலும் பிரம்மாண்ட தோற்றம் கொண்ட அந்தப் புலிக்கு 2016 ஆம் ஆண்டு 7 வயதாக இருந்தது. எனவே இந்தப் புலியை பிரத்யேகமாக கண்காணிக்கத் தொடங்கினர் வனத்துறை அதிகாரிகள். இதன் காரணணாக புலியின் கழுத்தில், எலக்ட்ரானிக் காலர் மாட்டப்பட்டது. அதன் சிக்னல் மூலம், சரணாலய வனத்தில் புலி  எங்கிருக்கிறது என்பதை அதிகாரிகள் கவனித்து வந்தனர். 

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து ‘ஜெய்’ காணாமல் போனது. ஜெய் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் வழங்கப்படும் என மாநில அரசும் அறிவித்திருந்தது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் ஜெய் குறித்த எந்தத் தகவலும் தடையமும் கிடைக்கவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜெய் உயிரிழந்ததற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பணத்துக்காக இப்புலி வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஜெய் உருவத்தில் பெரியது. இதன் தோல் மட்டுமே சர்வதேச சந்தையில்  ரூ.1 கோடிக்கு விலை போகும். இதனால், யாராவது வேட்டையாடிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close