[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

இன்டர்நெட்டில் மகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ: உடைந்துபோன பெற்றோர்

14-year-old-delhi-girl-raped-by-neighbour-family-learns-of-assault-from-internet

இன்டர்நெட்டில் வீடியோ பார்த்து தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை டெல்லி பெற்றோர் ஒருவர் அறிந்துள்ளனர். இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் மங்கோல்பூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 14. இவரது வீட்டின் அருகில் வசிக்கும் கூலித்தொழிலாளியான 32 வயது இளைஞர் ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு அமுதாவை முன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த நேரத்தில் இளைஞரின் நண்பர்கள் இருவரும் அங்குதான் இருந்திருக்கின்றனர். பின்னர் இதுகுறித்து வீட்டில் தெரிவித்தால், வீடியோ, புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடுவோம் எனவும் அவர்கள் மிரட்டியிருக்கின்றனர். இதனால் பயந்துபோன அந்தச் சிறுமி இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் இருந்து மறைத்திருக்கிறார். இருப்பினும் அந்தச் சிறுமிக்கு தெரியாமலேயே அதுதொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இணையம் முழுவதும் பரவியது.

இதனிடையே அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் இணையத்தை ஏதேச்சையாக பார்க்கும்போது, அதில் அந்த சிறுமியின் வீடியோவும் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பெற்றோரும் அதனை பார்த்து உறுதிசெய்த பின்பு மகளிடம் இதுகுறித்து கேட்டிருக்கின்றனர். அப்போது அந்த சிறுமி நடந்த அனைத்தையும் தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close