[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

நாளை ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் இயங்காது

southern-railway-website-will-not-work-tomorrow

தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் (www.sr.indianrailways.gov.in) செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே கீழ் இயங்கும் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் பிற்பகல் 2.05-3.45 மணி வரை, இரவு 11.30-1.45 வரை செயல்படாது. அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும், இரவு 11.30 முதல் 1.45 மணி வரை  டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்த பணிகளுக்காக டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும், வருடம் ஒருமுறை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வது, செயல்பட்டு வரும் சேவையை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்

. ஆகவே பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு, மற்றும் பயணம் குறித்த பணிகளை முடிக்குமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close