[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

சினிமா ஸ்டைலில் ஜன்னலை உடைத்து எஸ்கேப் ஆன கைதிகள்!

three-bangladeshi-inmates-escape-from-kolkata-s-alipore-jail

மேற்கு வங்க சிறையில் இருந்து பங்களாதேஷை சேர்ந்த 3 கைதிகள் தப்பியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது,அலிப்பூர் மத்திய சிறைச்சாலை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பல தலைவர்கள் அடைக்கப்பட்டிருந்த இந்தச் சிறைச்சாலை பிரிட்டீஷ் காலத்தில் கட்டப்பட்ட ஒன்று.  இந்தச் சிறைச்சாலையில் வழக்கம் போல நேற்று காலை சிறைக்கைதிகளை எண்ணும் பணி நடந்தது. அப்போதுதான் பங்களாதேஷை சேர்ந்த கைதிகள், இமோன் சவுதிரி (26) , பிரிதோஷ் ஷேக் (29), பரூக் ஹவ்லாதர் (24) ஆகியோரைக் காணவில்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சிறைத்துறையினர் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறையை பார்த்தனர். அங்குள்ள இரும்பு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கைதிகள் மூன்று பேரும் ஆக்‌ஷா பிளேடால் இரும்பு ஜன்னல் கம்பிகளை ஒரு வாரமாக அறுத்துள்ளனர். இந்த சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக, சிறை மருத்துவமனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரப்பட்ட தூக்க மாத்திரைகளை சேகரித்தனர். பின்னர் சிறைச்சாலை கேன்டினில் கிடைக்கும் இனிப்புடன் கலந்து அதை, அக்கம் பக்கத்து சிறைக் கைதிகளுக்கு, ’சும்மா சாப்பிடுங்க’ என்று ஒரு வாரமாக இரவில் கொடுத்துள்ளனர்.

இதனால் அவர்கள் நன்றாக தூங்க, இவர்கள் கம்பிகளை அறுத்துள்ளனர். பின்னர், குளிருக்காக சிறைச்சாலையில் கொடுத்த பெட்சீட் உள்ளிட்ட துணிகளைத் தூக்கிக்கொண்டு வெளியே குதித்துள்ளனர். அங்கிருந்து 400 மீட்டர் தூரத்தில் உள்ள காம்பவுண்டு சுவருக்கு வந்து, ட வடிவிலான இரும்பு பைப்பை பிடித்து காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்து தப்பியுள்ளனர். இதற்கு குளிருக்காக கொடுத்த துணிகள் உதவியிருக்கிறது. 

பலத்த கண்காணிப்பு உள்ள இந்த சிறைச்சாலையிலேயே கைதிகள் தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணியில், இருந்த சிறைக்காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் விசாரணை நடந்து வருகிறது. தப்பியவர்களில் ஒருவர் தண்டனை கைதி என்றும் இருவர் விசாரணைக் கைதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close