[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

முகவரி சான்றாக இனி பாஸ்போர்ட்டை பயன்படுத்த முடியாது

government-may-remove-address-details-from-passport-and-change-colour-to-orange

மக்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு கலருக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவது, பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு முகவரி நீக்கப்படுவதாக பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது மூன்று விதமான கலர்களில் உள்ளது. மத்திய அரசின் அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறம் மற்றும் இதர மக்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

நீல நிற பாஸ்போர்ட்களில் இரண்டு வகைகள் உள்ளது. நீல நிற பாஸ்போர்ட்களில் ஒருவகை வெளிநாடுகளில் பயணிகளின்  சோதனைக்கு முக்கியமானது. மற்றொன்று அவசியம் இல்லை. தற்போது எமிகிரேசன் சோதனைக்கு பயன்படும் பாஸ்போர்ட்டின் நிறத்தை நீலத்தில் இருந்து ஆரஞ்சாக மாற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் பாஸ்போர்ட்டை முகவரி சான்றிற்காக எங்கும் பயன்படுத்த முடியாது. அதற்கான பக்கத்தை அரசு நீக்கிவிடுவதால் அப்பயன்பாட்டில் இருந்து பாஸ்போர்ட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close