[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

கணக்காளர் சுட்டுக்கொலை: ரூ.22 லட்சம் கொள்ளை

accountant-shot-dead-robbed-of-rs-22-lakh-in-jind

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் கணக்காளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் உள்ள ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருபவர் சந்தர்பால் சிங். இவர் அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் ரூ.22 லட்சம் பணம் பெற்று அதனை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக சென்றுள்ளார். ஆலைக்கு வெளியே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல முற்படும்போது அங்கு மறைந்திருந்த இருவர் இவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தர்பாலை அங்கிருந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைபலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், சந்தர்பாலின் உடலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. இச்சம்பவத்தில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) மற்றும் 390 (வழிப்பறி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் வழிப்பறி காரணமாக இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாக தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close