[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி முகத்தை சிதைத்த கொடூரன் கைது

four-year-old-girl-fights-for-life-in-mumbai

பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாக 4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி முகத்தை சிதைத்த கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான சிறுமி கடுமையான காயங்கள் மற்றும் எழும்புமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் 4 வயது சிறுமியை முன்விரோதம் காரணமாக கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த கொடூரனை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பயேந்தர் காவல் நிலையத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ராம்பால் சிங் கூறுகையில், சிறுமியை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றதாக ரஹிம் சவுகத் அலி ஷேக் என்பவனை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். அவனுக்கு சிறுமியின் பெற்றோர் மீது கடுமையான கோபம் இருந்துள்ளதாக கூறினார். ரஹிம் சவுகத் அலி ஷேக்கால் கடுமையான தாக்குதலுக்கு ஆளான சிறுமியை அவளது பெற்றோர்கள் குப்பை தொட்டி அருகில் ரத்த வெள்ளத்தில் கண்டெடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மண்டை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றும் உள்மூளை காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த கொடூர செயலை செய்த ரஹிம் சவுகத் அலி ஷேக் மீது இந்திய தண்டனை சட்டம் 307ன் (கொலை முயற்சி) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close