[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

காவல்துறை அதிகாரி தற்கொலை: கர்நாடக அமைச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

case-filed-by-cbi-against-minister-blamed-by-karnataka-cop-on-tv-before-suicide

கர்நாடகாவில் காவல்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அம்மாநில அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்க்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள மடிகேரியில் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் எம்.கே.கணபதி என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. தற்கொலைக்கு முன்னர், தனது முடிவுக்குக் காரணம் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மற்றும் இரு காவல்துறை உயர் அதிகாரிகள்தான் என கணபதி கூறியதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அமைச்சர் ஜார்ஜ், முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் பிரணவ் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் ஆகிய மூவர் மீது சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமைய்யா, இப்பிரச்னையில் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு இன்று கருத்துத் தெரிவிப்பதாகக் கூறினார். அமைச்சர் ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவது குறித்து கேட்டபோது, எடியூரப்பா மீது கூட சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், அதற்குப் பொறுப்பேற்று அவர் தற்போது வகித்துவரும் எம்பி பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் சித்தராமைய்யா வினவினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close