[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

சுயேச்சையால் வீண் செலவு: போட்டியிட தடை கோரி மனு!

hc-notice-to-govt-on-pil-to-bar-independents-from-contesting

தேர்தலில் சுயேச்சைகள் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், டெல்லி மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியடைவோம் என தெரிந்தும் சுயேச்சையாக பலர் போட்டியிடுகிறார்கள். இதனால், தேர்தல் முறையில் நிலையற்ற தன்மையும் தேர்தல் கமிஷனுக்கும் அதிக செலவும் ஏற்படுகிறது. இதனால் சுயேச்சையாக போட்டியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

மேலும்,  தேர்தலில் ஒருவரே 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் இயற்ற வேண்டும் என 2004ம் ஆண்டில் அப்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் பரிந்துரைத்தார். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் டங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close