[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
இந்தியா 06 Oct, 2017 01:24 PM

கேரள அரசை குறைகூறிய யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி

pinarayi-vijayan-reacted-to-yogi-criticizing-the-kerala-government

கேரளாவில் சட்டம் ஒழுங்கு, மருத்துவ வசதிகள் சரியில்லை என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு யாத்திரையை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா துவங்கி வைத்தார். இதில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய யோகி, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதாகவும், ஜிஹாத் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் கேரளாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மருத்துவ வசதிகள் சரியில்லை எனவும் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் உத்தரப் பிரதேசத்திலேயே ஏராளமான பிரச்னைகள் இருக்கும் நிலையில் கேரளாவிற்கு வருவதற்கு ஆதித்யநாத்திற்கு எப்படி நேரம் கிடைத்தது என்பது வியப்பாக உள்ளது என்றும், மேலும் இயற்கை எழில் மிகுந்த கேரளாவிற்கு வந்து சென்றது மூலம் ஆதித்யநாத் புத்துணர்ச்சி பெற்றிருப்பார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேசிய அளவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 34 விகிதம். இதில் கேரளாவில் 10 விகிதம். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 43 சதவிதம் ஆக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை வெளி உலகுக்கு தெரிய வைத்த யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். இறுதியாக சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு கேரள அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close