[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனாகாரியா ராஜினாமா

finance-ayodh-vice-president-arvind-panagariya-resigned

நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனாகாரியா ராஜினாமா செய்தார். 

திட்டக்குழுவுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் முதல் துணைத் தலைவராக அரவிந்த் பனாகாரியா கடந்த 2015ல் நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 31ம் தேதியுடன் பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக அரவிந்த் பனாகாரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய பொருளாதார அரசியல் துறையில் பேராசிரியராகப் பதவி வகித்த அவர், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக மையம் உள்ளிட்டவைகளிலும் பணியாற்றியுள்ளார். 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் சமீபத்தில் கூறியிருந்த பனாகாரியா, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருந்தார். மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்களின் ஒருவராகப் போற்றப்படும் அரவிந்த் பனாகாரியா, பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘இந்தியா: தி எமெர்ஜிங் ஜியாண்ட்’ (India: The Emerging Giant) என்ற புத்தகம் பரவலான கவனம் பெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close