[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

காஷ்மீரின் முதல்வராகவுள்ள மெபூபாவின் அரசியல் பயணம்

who-is-mehbooba-mufti

காஷ்மீரின் புதிய முதல்வராக பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மெகபூபா முஃப்தி யார்? அவரது பின்னணி என்ன ? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்

காஷ்மீரின் அனந்தநாக் நகரில் 1959ம் ஆண்டு மே 22ம் தேதி முஃப்தி முகமது, குல்ஷன் நசீர் தம்பதிக்கு மகளாக மெகபூபா பிறந்தார். மெகபூபாவுக்கு ஒரு சகோதரியும், ஒரு சகோதரரும் உள்ளனர். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்துள்ள மெகபூபாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சமூகப் பணிகளில் கவனம் செலுத்தி வந்த அவர், 1995ல் தந்தையுடன் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

1996ல் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மெகபூபா, 1996 முதல் 99 வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக பணியாற்றினார். மீண்டும் 2002 முதல் 2004ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

2004ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் மெகபூபா. 2009ம் ஆண்டில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக மெகபூபா பொறுப்பேற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தனது கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மக்கள் ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைப் பிடித்ததில் மெகபூபா முக்கிய பங்காற்றினார்.

தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் மெகபூபா முன்னிலை வகித்தார். அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை முப்தி முகமது சயீத், தனக்குப் பிறகு காஷ்மீர் முதலமைச்சராக மெகபூபா தகுதியானவர் என்று கடந்த மாதத் தொடக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். முப்தி முகமது சயீதின் மறைவையடுத்து, காஷ்மீரின் முதலாவது பெண் சட்டப்பேரவைத் தலைவராக மெகபூபாவை அவரது கட்சி அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close