[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

குடியரசுத் தலைவர் வாகனத்தை நிறுத்திய காவலருக்கு பாராட்டு

traffic-police-applauded-for-stopping-president-vehicle-for-ambulance-way

பெங்களூருவின் நெரிசல் மிகுந்த டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் வாகனத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட்ட போக்குவரத்து காவலருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

போக்குவரத்து காவல் பிரிவில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் எம்.எல்.நிஜலிங்கப்பா. மெட்ரோ கிரீன்லைனைத் தொடங்கிவைப்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்திருந்தார். அவரது வாகனம் டிரினிட்டி சர்க்கிள் பகுதிக்கு வந்தபோது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் அந்த சந்திப்புக்கு வந்து சேர்ந்தது. பொதுவாக விஐபிக்களுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதே நடைமுறையே டிரினிட்டி சர்க்கிள் பகுதியிலும் கடைபிடிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாகன அணிவகுப்பை நிறுத்தி, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு நிஜலிங்கப்பா வழிவிட்டார். அவரது இந்த செயல் பெங்களூருவாசிகள் மட்டுமல்லாது, நெட்டிசன்கள் பலரது மனங்களையும் வென்றுவிட்டது. அவருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது. நிஜலிங்கப்பாவின் செயலைப் பாராட்டி, அவருக்கு பரிசு வழங்க பெங்களூரு மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. நிஜலிங்கப்பாவின் இந்த செயல்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது என்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பிரவீன் சூட் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close