[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: ஸ்டாலினுக்கு சுஷ்மா பதில்

sushma-swaraj-answers-stalin

 

கத்தாரில் உள்ள தமிழர்கள் உள்பட ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் நலனை காக்குமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கத்தார் நாட்டுடன் அரபு நாடுகள் உறவைத் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே கத்தாரில் வசிக்கும் 6.5 லட்சம் இந்தியர்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள தமிழர்கள் உள்பட அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், கத்தாரில் உள்ள தமிழர்கள் உள்பட ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு பதிலளித்து டிவிட்டரில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close