[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தார் கனிமொழி: ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கக் கோரிக்கை

dmk-leader-kanimozhi-requests-nasim-zaidi-to-prevent-cash-for-votes

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கக் கோரி டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மனு அளித்தார்.

பணம் கொடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதில் சுங்க அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோரையும் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து 6.8 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்‌பட்டதற்கு நஜீம் ஜைதியிடம் நன்றி தெரிவித்ததாகவும், மேலும் போலி வாக்காளர்கள் இருந்தால் அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நஜீம் ஜைதி உறுதி அளித்ததாகவும் கனிமொழி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close