[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

4 மாநிலங்களில் பாஜக ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்

exit-polls-in-five-states-favour-to-bjp

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், பஞ்சாப்பில் பா.ஜ.க.- சிரோண்மணி அகாலி தளம் கூட்டணி, ஆட்சியை இழக்கும் என்று தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில், ஆளும் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 136 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 180 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 77 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. கோவாவில் ஆளும் பா.ஜ.க.விற்கு 19 இடங்களும், காங்கிரசுக்கு 14 இடங்களும் கிடைக்கும் என தெரிகிறது.

உத்தரகாண்ட்டில் பா.ஜ.க 44 இடங்களையும், காங்கிரஸ் 21 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் பா.ஜ.க.விற்கு 31 இடங்களும், காங்கிரஸூக்கு 23 இடங்களும் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

‌பஞ்சாப்பில் ஆளும் பா.ஜ.க -‌ சிரோண்மணி அகாலிதளம் கூட்டணிக்கு 7 இடங்களும், காங்கிரஸ், ஆம் ஆத்மி தலா 55 இடங்களைப் பிடிக்கும் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பின்படி, உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. 179 இடங்களும், காங்கிரஸ் 136 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களும் பிடிக்கின்றன.

சி.என்.என். டி.வி. கருத்துக்கணிப்பின்படி, உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க 161 இடங்களும், சமாஜ்வாதி 147 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 81 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ், என்.டி.டி.வி., சி.என்.‌என் ஆகியவற்றின், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, பஞ்சாபில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை இழக்கிறது. மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close