[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

பிரதமருக்கு எதிராக கருத்து: மன்னிப்பு கேட்டார் அமைச்சர்

bihar-minister-apologises-to-pm-modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்துத் தெரிவித்த பிகார் மாநில அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 50 நாட்களாகியும் இன்னல்கள் தொடருவதால், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை காலணியால் அடிக்குமாறு, பிகார் அமைச்சர் அப்துல் ஜலீல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். உடனடியாக அமைச்சர் பேசியதை போன்று சிலர் செயலிலும் ஈடுபட்டனர். அமைச்சரின் இந்தப் பேச்சு உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க.வினர், அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு முதல்வர் நிதிஷ்குமாரை வலியுறுத்தினர்.

இந்நிலையில், பிரதமர் மீதான தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார் அமைச்சர் அப்துல் ஜலீல். அவர் கூறும்போது, ‘தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close