[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

பணத்தட்டுப்பாடு பிப்ரவரியில் தீரும்?

demonetisation-issue-solved-in-feb

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு வரும் பிப்ரவரியில் முழுமையாக நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அதற்குப் பதிலாக புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்து பழைய நோட்டுக்குப் பதிலான புதிய நோட்டுகள் முழுமையாக புழக்கத்துக்கு வராததால் இன்னும் பணத் தட்டுப்பாடு தீரவில்லை. வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. எனினும் வங்கிகளில் பணம் இல்லாததால் அந்தத் தொகையையும் முழுமையாக வாடிக்கையாளர்களால் எடுக்கமுடியவில்லை. அதே போல் ஏடிஎம்களில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்ட போதிலும், ஏடிஎம்களுக்குப் போதிய ரூபாய் நோட்டுகள் வராததால், பல ஏடிஎம்கள் மூடிக் கிடக்கின்றன. திறந்திருக்கும் ஏடிஎம்களும் முழுமையாக செயல்பாடாமல் இருக்கின்றன. செயல்படும் ஒன்றிரண்டு ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

மத்திய அரசின் அறிவிப்பின் போது, சுமார் 15 லட்சம் கோடி மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன. அரசு அறிவித்துள்ளபடி அனேகமாக அந்தப் பணம் முழுவதும் டிசம்பர் இறுதிக்குள் வங்கிகளுக்கு வந்து சேர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நோட்டுகளைப் பொருத்த வரையில் தற்போது ரிசர்வ் வங்கி முழுவீச்சில் அச்சடித்து விநியோகித்து வருகிறது. டிசம்பர் 10ம் தேதி நிலவரப்படி 4.6 லட்சம் கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் அச்சடித்து புழக்கத்திற்கு வந்துள்ளன. ஜனவரி 10ம் தேதிக்குள் 9 லட்சம் கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் அச்சடித்து புழக்கத்திற்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 10ம் தேதி 13 லட்சம் கோடியாக அது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி புதிய பணம் அச்சடித்து விநியோகிக்கும் இதே வேகத்தை தொடர்ந்தால் பிப்ரவரி இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு முழுமையாக நீங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close