[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப்படை தளபதிக்கு 4 நாள் சிபிஐ காவல்

sp-tyagi-gets-4-day-cbi-custody

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப் படை தளபதி எஸ்.பி. தியாகியை 4 நாள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ரூ.3,600 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக கே.சி. தியாகி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட கே.சி.தியாகி, அவரது சகோதரர் சஞ்சீவ் மற்றும் வழக்கறிஞர் கவுதம் ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 4 நட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஊழல் வழக்கு ஒன்றிற்காக விமானப் படைத் தளபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். எஸ்.பி.தியாகி, 2007ஆம் தேதி விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close