[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

union-minister-sushma-swaraj-to-the-kidney-transplant-surgery

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (64), நீரிழிவு நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து சுஷ்மா சுவராஜ், தனது ட்விட்டர் பதிவில், தனக்கு சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எம்சி மிஸ்ரா உட்பட்ட மருத்துவர்கள் குழு சுஷ்மா சுவராஜூக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தது. வி.கே. பன்சால், வி.சீனு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர் சந்தீப் மகாஜன் ஆகிய டாக்டர்கள் அடங்கிய குழுவினர் காலை 9 மணிக்கு ஆரம்பித்து 5 மணிநேரம் சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close