[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மக்களவையில் பேச வாய்ப்பு அளிக்காததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்... பிரதமர் மோடி

pm-narendra-modi-slams-opposition-over-notes-ban-says-not-being-allowed-to-speak-in-parliament

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களவையில் பேச எதிர்க்கட்சிகள் வாய்ப்பு அளிக்காததால், மக்கள் மன்றத்தில் பேசுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத்தின் தீஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு விவகாரத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ள போதும் எதிர்க்கட்சியினர் அதற்கு தயாராக இல்லை என கூறினார். நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சியினரின் செயல்பாடு குடியரசுத் தலைவருக்கே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த பிரதமர், மக்களவையில் பேச வாய்ப்பு கிடைக்காத நிலையில் தான் மக்கள் மன்றத்தில் பேசுவதாகக் கூறினார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நக்சல் மற்றும் தீவிரவாதத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், ஏழைகளுக்காக பேசுவதை விட ஏழைகளுக்காக பணியாற்றுவதற்கே தனது அரசு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார். கருப்பு பணம் பதுக்கியவர்கள் யாருமே அரசிடம் இருந்து தப்பிக்க முடியாது எனவும் பிரதமர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

பொதுமக்கள் வங்கி மற்றும் ஏடிஎம் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என கூறிய மோடி, ஈ வாலெட்டுகள் மூலம் வங்கிச் சேவைகள் செல்போனிற்கே வந்துவிட்டதாக் கூறினார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவே பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறிய பிரதமர் மோடி, தான் வாக்களித்தபடியே 50 நாட்களில் பண பிரச்னைகள் தீர்ந்துவிடும் எனவும் உறுதி அளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close