ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதனையடுத்து, ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அவை கூடுவதற்கு முன்பே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே கூடிய எதிர்க்கட்சிகள், ரூபாய் நோட்டு பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்தன. இதனையடுத்து காலை 11 மணிக்கு மாநிலங்களை கூடிய போது, ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை தொடர்ந்து செயல்பட முடியாத அளவிற்கு முடங்கியதால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் அமளியை கைவிடவில்லை. இதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!