[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

டெல்லியில் கடும் பனிமூட்டம்... விமான, ரயில் சேவைகள் பாதிப்பு

fog-hits-flight-and-train-service-in-delhi

பனிமூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் விமான சேவை மற்றும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே, காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக, ‌டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பன்னாட்டு விமா‌னங்கள் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையங்‌ளுக்கு மாற்றிவிடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் விமான நி‌லை‌யத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், டெல்லி ரயில் நிலையத்தி‌ல் இருந்து புறப்படவேண்டிய 12‌ ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வந்துசேர வேண்டி‌ய 70 ‌ரயில்கள் காலதாமதமாக ‌வந்துசேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, மேலும் சில நாட்கள் பனிமூட்டம் நீடிக்கும் என டெல்லி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close