[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

புதிய 500 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு... பிரிண்டிங் செய்யும் பணி நிறுத்தம்?

printing-of-rs-500-notes-doubles

புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியதாலேயே நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு வதந்தி பரவியது. மேலும், அச்சுப்பிழைகள் மற்றும் இருவேறு விதமான புதிய 500 ரூபாய் நோட்டுகள் கடந்த வாரத்தில் புழக்கத்தில் வந்ததால் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி இரு மடங்காக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்ட்ராவில் உள்ள நாசிக் மற்றும் மத்தியப்பிரதேசத்திலுள்ள டேவாஸ் ஆகிய இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான அச்சகங்களில் புதிய 500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்குவங்க மாநிலம் சல்பானி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக நாசிக்கில் தினசரி 80 லட்சம் (ரூ.400 கோடி) புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close